பெரும்பாலும் விஞ்ஞானிகள் மற்றும் சாதாரண மக்களிடையே சிறுகோள் பூமியுடன் மோதக்கூடும் என்ற கவலை உள்ளது. ஆனால், பூமியில் வாழும் மக்கள் கோடீஸ்வரர்களாக மாறுவார்கள் என்று கணிக்கப்படும் அளவுக்கு ஒரு சிறுகோளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு சிறுகோள் மோதுவதால் பூமியில் வாழும் மக்கள் பணக்காரர்களாக மாறுவது எப்படி என்று இப்போது மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன, இந்த சிறுகோளில் அப்படி என்ன உள்ளது?
இந்த சிறுகோளின் பெயர் 16 சைக்கி. இது 1852 ஆம் ஆண்டில் இத்தாலிய விஞ்ஞானி அன்னிபேல் டி காஸ்பரிஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் படி, சிறுகோள் மிகவும் மதிப்புமிக்கது, அதை சம பாகங்களாகப் பிரித்தால், உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் பில்லியன் கணக்கான சொத்துக்களை வைத்திருக்க முடியும்.
இந்த சிறுகோள் செவ்வாய் மற்றும் வியாழன் இடையே அமைந்துள்ளது. நாசாவின் ஹப்பிள் டெலஸ்கோப் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, இந்த சிறுகோளின் மேற்பரப்பில் பூமியின் மையப்பகுதியை ஒத்த நிக்கல் மற்றும் இரும்பு இருக்கலாம். இந்த சிறுகோள் தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களால் நிறைந்துள்ளது. அதாவது இந்த சிறுகோள் தங்கத்துடன் பிளாட்டினம், இரும்பு மற்றும் நிக்கல் ஆகியவற்றின் களஞ்சியமாகும்.
இந்திய ரூபாயில் கணக்கிட முடியாத அளவுக்கு விலை அதிகம்.
இந்த சிறுகோள் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது விலைமதிப்பற்ற உலோகங்களின் களஞ்சியத்தைக் கொண்டுள்ளது, 16 சைக்கி இறந்த கிரகத்தின் திறந்த உலோக இதயமாக கருதப்படுகிறது. 16 சைக்கி சிறுகோளின் மதிப்பு சுமார் 10,000 குவாட்ரில்லியன் டாலர் .
ஓரு குவாட்ரில்லியனில் 15 பூஜ்ஜியங்கள் இருப்பதால் அதை இந்திய ரூபாயில் கணக்கிடுவது கடினம். இது முழு பூமியின் தற்போதைய பொருளாதாரத்தை விட ஆயிரம் மடங்கு அதிகம்.
விண்வெளி நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த சிறுகோளில் இருக்கும் இரும்பின் மதிப்பு சுமார் 8,000 குவாட்ரில்லியன் பவுண்டுகள். அதனால்தான் இந்த சிறுகோள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா 2023ல் சைக் விண்கலத்தை ஏவியது.
சிறுகோள் மோதலால் என்ன சேதம் ஏற்படலாம்?
ஒரு பெரிய சிறுகோள் பூமியைத் தாக்கினால், அது பயங்கரமான அழிவை ஏற்படுத்தும். அடுக்குமாடி குடியிருப்பின் அளவுள்ள சிறுகோள் பூமியைத் தாக்கினால், அது ஒரு சிறிய நகரத்திற்கு சமமான பகுதியை அழிக்கக்கூடும். ஒரு சிறுகோள் பூமியில் மோதும் போது, நிறைய தூசி மற்றும் புகையை வளிமண்டலத்தில் உருவாக்குகிறது. இதனால் சூரிய ஒளி பூமியை அடையாமல் வெப்பம் வெகுவாக குறைகிறது. இது பல விலங்குகளின் மரணத்திற்கும் வழிவகுக்கும்.