எங்களுக்கு வரி விதித்தால், நாங்களும் வரி விதிப்போம் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், சில அமெரிக்க பொருட்களின் இறக்குமதி மீது இந்தியா விதித்துள்ள “அதிக சுங்க வரிக்கு” பதிலடி கொடுக்கும் வகையில், பரஸ்பர வரிகளை விதிக்கும் தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி அமெரிக்கா அதிபராக பொறுப்பு ஏற்க உள்ளார். இந்த சூழலில், அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர்களுக்கு அதிகமாக முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து அனுமதிகளும் எளிதில் கிடைக்கும் என டிரம்ப் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், எங்களுக்கு வரி விதித்தால், நாங்களும் வரி விதிப்போம் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து மாநாட்டில் டிரம்ப் பேசியதாவது: சில அமெரிக்கா பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகம் விதிக்கப்படுகிறது. அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும், பிரேசிலும் இருக்கிறது. அவர்கள் அதிக வரி விதித்தால், நாங்களும் வரி விதிப்போம். அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்க விரும்பினால், நாங்கள் அவர்களிடம் அதே கட்டணத்தை வசூலிக்கப் போகிறோம்.
எல்லா சூழ்நிலைகளிலும் அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு ஒரு சைக்கிளை அனுப்புகிறோம். எங்களிடம் ரூ. 100 முதல் ரூ.200 வரை வசூலிக்கிறார்கள். இந்தியா நிறைய கட்டணம் வசூலிக்கிறது.
தொடர்ந்து அதிக வரி விதித்தால் நாங்களும் இந்தியாவுக்கு பரஸ்பர வரி விதிப்போம். இவ்வாறு என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
“பரஸ்பரம்” என்பது டிரம்ப் நிர்வாகத்திற்கு ஒரு முக்கிய தலைப்பாக இருக்கும். நீங்கள் எங்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதுதான் நீங்கள் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும்” என்று டிரம்ப்பின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறினார்.