பாக்கிஸ்தான் பஞ்சாபின் அட்டாக் பகுதியில் உள்ள சிந்து நதிக்கரையில் பெருமளவிலான விலைமதிப்பற்ற தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் அட்டாக் மாவட்டத்தில் உள்ள சிந்து நதியில் தங்கம், பிற விலைமதிப்பற்ற தாதுக்கள் பெரிய அளவில் காணப்படுகின்றன. இதன்காரணமாக, இந்த பகுதியில் சட்டவிரோத சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் அரசு கடந்த ஆண்டு சட்டவிரோத சுரங்கத்தை தடை செய்ய வேண்டியிருந்தது. பாகிஸ்தானின் புவியியல் ஆய்வு அறிக்கையின்படி, சிந்து நதியில் பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருப்பு இருக்கலாம். இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.60 ஆயிரம் கோடி (பாகிஸ்தான் ரூபாய்) மதிப்புடையது என்று கூறப்படுகிறது.
இப்பகுதி மக்கள் மணல், ஜல்லிக்குள் மறைந்து இருக்கும் தங்கத்தை எடுப்பதற்காக அதிக அளவில் சட்டவிரோத சுரங்கங்களை மேற்கொண்டு வருகின்றனர். பாகிஸ்தான் அரசு 144 தடை விதித்து இங்கிருந்து தங்கம் எடுக்க தடை விதித்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை அமைச்சகம், பிளேஸர் தங்கம் போன்ற விலைமதிப்பற்ற கனிமங்களிலிருந்து அரசாங்க கருவூலத்திற்கு நிறைய பணம் கிடைக்கும் என்று கூறியுள்ளது.
பஞ்சாபின் அட்டாக் அருகே சிந்து மற்றும் காபூல் ஆறுகள் இணையும் இடத்தில் இந்த தங்கம் லட்சக்கணக்கான ஆண்டுகளாக குவிந்துள்ளது. இந்த தங்கம் முக்கியமாக குளிர்கால மாதங்களில் நீர் மட்டம் குறையும் போது ஆற்று மணலுடன் கலந்த பிரகாசமான துகள்களாக தோன்றும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
குளிர்காலத்தில், சிந்து நதியின் நீர்மட்டம் குறையும் போது, உள்ளூர் மக்கள் சட்டவிரோதமாக தங்கத் துகள்களை சேகரிக்கச் செல்கிறார்கள். இதில் கனரக இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.