பறவைகள் சரியான V-வடிவமைப்பில் இடம்பெயர்வதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இது இயற்கையின் மிகவும் கவர்ச்சிகரமான, அழகான, ஒருங்கிணைந்த மற்றும் வியக்கத்தக்க காட்சிகளில் ஒன்றாகும். ஆனால் இது வெறும் காட்சிக்காக அல்ல. இதற்குப் பின்னால் ஒரு புத்திசாலித்தனமான காற்றியக்கவியல் காரணம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள், இவை அனைத்தும் குழுப்பணி மற்றும் ஆற்றல் சேமிப்பு ஆகியவற்றில் வேரூன்றியுள்ளன.
பறவைகள் தலைவரைப் பின்தொடர்வதற்காகவோ அல்லது ஒழுங்கமைக்கப்பட்டதாகத் தோன்றுவதற்காகவோ V வடிவத்தில் பறப்பதில்லை. இது எல்லாம் ஆற்றலைச் சேமிப்பது பற்றியது.
நெடுந்தொலைவு பறந்து வரும் பறவைகள் எப்போதுமே ‘ V ‘ வடிவிலே பறந்து செல்வதை பார்த்திருப்போம். பறவைகள் தங்களுடைய சிறகினை கீழாக அழுத்தி பறக்க பறவைகள் மேலே எழும்பி பறக்கின்றன. ஒரு பறவை தன்னுடைய சிறகை வேகமாக வலுவாக காற்றினை மேலிருந்து கீழாக அழுத்துகையில் அழுத்தப்படும் காற்று சிறகுக்கு பின்பாக மேலாக செல்லும். இப்படியாக ‘V ‘ வடிவில் முன்பாக பறக்கும் பறவை தன்னுடைய முழுமையான திறனையும் கூட்டி வலுவாக சிறகினால் அழுத்தும்.
இவ்வாறு அழுத்தி அந்த பறவை முன் நகர்கையில் சிறகினால் அழுத்தப்பட்ட காற்று மேலே எழும்பும். மேலே எழும்பும் காற்று அடுத்து பின்னால் வரும் பறவையின் சிறகினை மேலே எழுப்பி விடும். முன்பாக பறக்கும் பறவை அழுத்திய காற்றின் இடைவெளியில் பறவையின் சிறகு கீழாக இறங்கிடும்.
இவ்வாறாக முன்பாக பறக்கும் பறவையின் சிறகுகள் ஏற்படுத்தும் காற்றின் மேடு பள்ளமான இடைவெளிகள் காரணமாக அடுத்தடுத்து வரும் பறவைகள் தங்களுடைய திறனை வலுவாக அழுத்த தேவையில்லை. இந்நி’லையில் அவற்றின் சிறகுகள் இயல்பாக மேலே கீழாக சென்று வர எளிதாக கடந்து விட இயலும்.
இவ்வாறாக முன்பாக பறந்து செல்லும் பறவையானது மிகுந்த வலுவாக சிறகுகளை அழுத்திப் பறப்பதறனால் விரைவாக சேர்வடையும். இதனால் பின்பாக வரும் பறவைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்பாக பறக்கும் பறவையின் இடத்தை மாற்றிக் கொள்கின்றன.
இப்படியாக ‘ V ‘ வடிவில் நெடுந்தூரங்களை பறந்து கடக்கும் பறவைகளில் ஒரு சில பறவைகள் ஒரு சில நேரங்களில் தனித்து பாதை தவறிப் போகும் நேரங்களில், அந்தப் பறவை தனியாக சிரமப்படும் என்பதை உணர்ந்து சில பறவைகள் சென்று அந்த பறவையுடன் இணைந்து ‘ V ‘ வடிவாக பறந்து முன்பாக பறக்கும் பறவை பொறுப்பினை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றிக் கொண்டு பறந்து மொத்தமாக பறக்கும் ‘ V ‘ வடிவிலான கூட்டத்தில் சேர்த்து பறக்கின்றன. இதுவே பறவை ‘ V ‘ வடிவாக பறந்து நீண்ட நெடுந்தூரங்களை எளிதாக கடந்திடும் ரகசியம்