அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று புதுக்கோட்டையில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
புதுக்கோட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாக உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை வரவேற்று புதிய பேருந்து நிலையத்தில் நகர அதிமுக செயலாளர் எஸ்ஏ.எஸ்.சேட் (எ)அப்துல் ரகுமான் தலைமையில் மாவட்ட அவைத் தலைவர் வீ. ராமசாமி, மாவட்ட பொருளாளர் வி.சி. ராமையா ஆகியோர் முன்னிலையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக வர்த்தகர் பிரிவு துணைத்தலைவர் அப்பு (எ) கனகசபை, நிர்வாகிகள் வி.எம். கணேசன், முன்னாள் கவுன்சிலர்கள் ஐயப்பன், தியாகு, நகரத் துணைச் செயலாளர் பாரத் சின்னையா, ஸ்டாலின் மாஸ்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.