Close
செப்டம்பர் 20, 2024 6:34 காலை

புதுக்கோட்டை கவிராஜன் அறநிலையம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கல்       

புதுக்கோட்டை

புதுக்கோட்டைகவிராஜன் அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் நட்சத்திர ஆசிரியர்கள் விருது வழங்கும் விழா புதுக்கோட்டை ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது

புதுக்கோட்டை கவிராஜன் அறநிலையம் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் நட்சத்திர ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை கைக்குறிச்சி  ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த விழாவில் மேலப்பட்டி பட்டதாரி ஆசிரியர்  மகேஸ்வரன் , காமராஜபுரம் பட்டதாரி ஆசிரியர் சாண்டில்யன், திருவப்பூர் தமிழாசிரியர்பழனியம்மாள்,ஓணாங்குடிதலைமையாசிரியர்விஜயலட்சுமி, சொக்கநாதன்பட்டி இடை நிலை ஆசிரியர் அமுதா ஆகியோருக்கு நட்சத்திர ஆசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கவிராஜன் அறக்கட்டளை
ஆசிரியர் தினத்தையொட்டி கவிராஜன் அறக்கட்டளை சார்பில் நட்சத்திர விருது பெற்ற ஆசிரியர்கள்

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கல்லூரியின் தலைவர் குரு தனசேகரன், தேசிய நல்லாசிரியர் கவிஞர் தங்கம்மூர்த்தி, எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர் இந்திரா சௌந்தர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்லூரியின் தாளாளர் லியோ பெலிக்ஸ் லூயிஸ் , கல்லூரி நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தி ,கல்லூரியின் முதல்வர் கவிதா, கல்லூரியின் இயக்குனர் குமுதா,நிர்வாக அறங்காவலர் சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கவிராஜன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கவி முருகபாரதி  செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top