Close
நவம்பர் 22, 2024 4:28 மணி

பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள்: பாஜகவினர் 12 -ஆவது நாளாகத் தொடரும் கொண்டாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகரத்தை தூய்மை செய்யும் துப்புரவு சகோதர சகோதரிகளுக்கு அரசு தொடர்பு பிரிவு சார்பில் அவர்கள் பாதங்களுக்கு மலர் பூஜை செய்து பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கினர்

புதுக்கோட்டை பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 72-ஆவது பிறந்த நாளை 12 நாட்களாக பாஜக அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன். தலைமையில் கொண்டாடி வருகிறனர்.

இதில் 12 -ஆவது நாள் நிகழ்ச்சியாக புதுக்கோட்டை நகரத்தை தூய்மை செய்யும் துப்புரவு சகோதர சகோதரிகளுக்கு அரசு தொடர்பு பிரிவு சார்பில் அவர்கள் பாதங்களுக்கு மலர் பூஜை செய்தனர். பின்னர் பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி அவர்களது குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் கல்விக்கான உபகரணங்கள் பை வழங்கி புதுக்கோட்டை நகரத்தை சுத்தம் செய்யும் அவர்களது பாதம் தொட்டு நன்றியை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் செல்லத்துரை மற்றும் செந்தில்நாதன். திருமேணிசுந்தரம் நகரத் தலைவர் வடிவேலு புதுக்கோட்டை ஒன்றிய தலைவர் சூர்யா , அரசு தொடர்பு பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் மணி சுந்தரேசன் மாவட்ட செயலாளர் குரு ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top