புதுக்கோட்டை கண்ணதாசன் இலக்கியச் சாரல் சார்பாக சத்தியராம் இராமுக் கண்ணுவிற்கு கவியரசு கண்ணதாசன் விருதை மணிமேகலைப் பிரசுர உரிமையாளர் லேணா தமிழ் வாணன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதை ப்பித்தன், அமைப்பின் தலைவர் எஸ்.வி.எஸ். ஜெயகுமார் ஆகியோர் சேர்ந்து வழங்கினர்.
இதில் புதுக்கோட்டை திருக்கோவில்கள் அறங்காவலர் குழுத்தலைவர் பா.செந்தில்குமார், தமிழ்ச் செம்மல் கவிஞர் தங்கம்மூர்த்தி, சொல்லருவி மு.முத்துச்சீனிவாசன், அரசு சிறப்பு வழக்கறிஞர் மு.செந்தில் குமார், மாவட்ட, மருத்துவரணிச் செயலாளர் டாக்டர் மு.முத்துக்கருப்பன், அமைப்பின் பொதுச்செயலாளர் திருமலை சேகர், செயலாளர் தா.முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.