Close
செப்டம்பர் 20, 2024 3:36 காலை

புதுக்கோட்டையில் நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை தொடக்கம்

புதுக்கோட்டை

நவராத்திரி விழாவுக்காக புதுக்கோட்டையில் விற்பனைக்கு வந்துள்ள கொலு பொம்மைகள்

புதுக்கோட்டையில் நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை தொடங்கியது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா வருகிற 26  -ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நவராத்திரி விழாவையொட்டி இந்துக்கள் தங்கள் வீட்டில் 9 நாட்களும் கொலு பொம்மை களை வைத்து அலங்கரித்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டதால், இந்த ஆண்டு நவராத்திரி விழா கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளது. கொலு பொம்மை விற்பனை விழாவையொட்டி புதுக்கோட்டை சாந்தநாதர் சந்நிதி அருகிலுள்ள ஜி.டி.என். பூஜை பொருட்கள் விற்பனை நிலையத்தில்  நவராத்திரி கொலு பல வண்ணங் களில் சிறியது முதல் பெரியது வரை கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இது குறித்து, வியாபாரி சேகர் கூறுகையில்,  விற்பனைக்காக பொம்மைகள் மதுரை சென்னை,பெங்களூர் கொல்கத்தா உள்ளிட்ட ஊர்களிலிருந்து விதவிதமான கொலு பொம்மைகள் வந்துள்ளன. இந்த விற்பனையும் சூடுபிடித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் கொலு பொம்மை விற்பனை நடக்கிறது. இங்கு ரூ.100 முதல் ஆயிரம் வரை கொலு பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது.

மக்களும் ஆர்வமுடன் வீடுகளில் கொலு வைப்பதற்காக பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர்.  கடைகளில், மீனாட்சி சுந்தரேசுவரர், சக்கரத்தாழ்வார், தெட்சிணாமூர்த்தி, அன்னபூரணி, சிவன், வராகி அம்மன், கற்பக விநாயகர், ராஜகணபதி, முருகன், சரஸ்வதி, பெருமாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு கடவுள் பொம்மைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்காக உள்ளன.

மேலும் ராமர், சீதை, வயதான தாத்தா, பாட்டி பொம்மைகள், மீனாட்சி திருக்கல்யாணம், சீனிவாசர் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், சரவண பொய்கை, சிவபெருமான் புட்டுக்கு மண்சுமந்த கதையை விளக்கும் பொம்மை செட், விவசாயத்தை பிரதிபலிக்கும் பொம்மை செட்டுகள் இந்த ஆண்டு விற்பனைக்கு  வைக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று திருவள்ளுவர், அப்துல்கலாம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி, விவேகானந்தர் போன்ற தலைவர்களின் உருவ பொம்மைகளும்  விற்பனைக்கு வந்துள்ளன. இந்த பொம்மைகள் அனைத்தும் களிமண் மற்றும் காகித கூழ் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர் என்கிறார் விற்பனையாளர் சேகர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top