Close
நவம்பர் 22, 2024 12:44 மணி

புதுகை அருகே நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், கல்லாக்கோட்டை அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் காத்திருக்கும் நெல் மூட்டைகள்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கல்லாக் கோட்டை நெல் கொள்முதல் நிலையத்திற்கு கல்லாக் கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயி கள் தாங்கள் விளைவித்த நெற்களை கல்லாக்கோட்டை நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவந்த தான் விற்பனை செய்வர்.

இந்நிலையில், சில மாதங்களாக கல்லாக்கோட்டை நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. நெல்கொள் முதல் செய்யவில்லை.  இதனால் விவசாயிகள் கொண்டு வந்து வைத்துள்ள  சுமார் 4 ஆயிரத்திற்கும் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையம் முன்பு குவித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் மழை பெய்ததால் நெல்மணிகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. இதனால் விவசாயிகள் பெரிதும் வேதனை அடைந்துள்ளனர். தாங்கள் செலவு செய்த பணத்தை கூட பெற முடியாதோ என்ற அச்சத்தில் உள்ளனர் .

மேலும் மழைகாலமாக உள்ளதால் மழை பெய்தால் அனைத்து நெற்களும் முளைத்து வீணாகிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இதனால் அரசு உடனடியாக தலையிட்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள்  வலியுறுத்தி வருகின்றனர்.

வருகின்ற பண்டிகை காலங்களுக்கு நெல் கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top