Close
செப்டம்பர் 20, 2024 6:34 காலை

பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணிராமதால் பிறந்தநாள்: கட்சி சார்பில் அன்னதானம்

புதுக்கோட்டை

பாமக தலைவர் பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய நிர்வாகிகள்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்  பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை அம்பாள்புரத்தில் உள்ள நேசக்கரம் முதியோர் இல்லத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு காலை உணவு வடக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் கருப்பையா, குன்றண்டார் கோவில் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top