ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 -ஆம் தேதி உலக வீடற்றோர் நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளின் நோக்கம் போதிய வீடுகள் இல்லாத பிரச்னைகளை மையப்படுத்துவதாகும்.இந்த சமூகம் வீடற்றோர்களை புறக்கணிக்காமல் அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும், உரிமைகளையும் கொடுக்க வேண்டிய கடமை உள்ளது.
குடும்ப சூழல் , போதிய வருமானம் இல்லாமை , வேலை வாய்ப்பு பிரச்னை , வயது முதிர்வு, அது மட்டும் இல்லாமல் சிறுபான்மையினர் மற்றும் புலம்பெயர்ந்த மக்களிடையே வீடற்ற தன்மை மிகவும் பொதுவானது. உலகளவில் இது போன்ற பல காரணங்களால் நாளுக்கு நாள் வீடற்றோர் அதிகரித்து வருகின்றனர்.
இது ஒரு தீவிரமான பிரச்னையாக இருந்தாலும், ஒருவருக் கொருவர் உதவக்கூடிய பல வழிகள் உள்ளன .இந்த பிரச்னைக்கு தீர்வு காணவும் வீடற்றோர்க்கு முன்னுரிமையும் கிடைக்க இந்நாளில் விழிப்புணர்வுடன் கொண்டாடப்படு கிறது.
அதனை கொண்டாடும் வகையில் இன்று(அக்.10) ஈரநெஞ்சம் அறநிலையம் பராமரித்துவரும் மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் ,மாநகராட்சி சார்பாக உணவு வழங்கப்பட்டது , அதனை தொடர்ந்து மருத்துவ முகாம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
உலக வீடற்றோர் நாள் சிறப்புடன் கொண்டாட்டத்தில், காப்பகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் சாலையில் ஆடிப்பாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை கொடுத்து அனைவரையும் சிந்திக்க செய்தது.
இந்நிகழ்ச்சிக்கு உதவி ஆணையாளர், நகர் நல அலுவலர் ,சுகாதார ஆய்வாளர், சுகாதார பணியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர் .