Close
மே 20, 2024 6:57 மணி

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

புதுக்கோட்டை

பிரதமந்திரியின் பயிர்க்காப்பீட்டு திட்டம்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு 28.02.2023 – க்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

வாழை மற்றும் மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு ராபி 2022-23 -ஆம் ஆண்டிற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெறலாம்.

பயிர் உற்பத்தி இழப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாத்தல், உணவு பாதுகாப்பை உறுதி செய்தல், மாற்றுப்பயிர் சாகுபடி யை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களோடு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்  புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேளாண் பயிர்களைப் போல, தோட்டக்கலை பயிர்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட வட்டாரங்களில், அறிவிக்கை செய்யப்பட்ட தோட்டக்கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி ஆகியவற்றிற்கு குறு வட்ட அளவில் காப்பீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தினை செயல்படுத்திட புதுக்கோட்டை – தொகுதி-!, அதாவது, அறந்தாங்கி வட்டாரத்திற்கு (வாழை பயிருக்கு மட்டும்) HDFC ERGO General Insurance Company என்ற காப்பீட்டு நிறுவனமும், புதுக்கோட்டை – தொகுதி-!!  அதாவது, கறம்பக்குடி, புதுக்கோட்டை, திருவரங்குளம் மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய வட்டாரங்களுக்கு Bajaj Allianz General Insurance Company என்ற காப்பீட்டு நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அறிவிக்கை செய்யப்பட்ட 12 குறு வட்டாரங்களில் (பிர்கா) விவசாயிகள் ஒரு ஏக்கர் வாழை பயிருக்கு காப்பீடு செய்ய பிரிமீயம் தொகையாக ரூ.2651.38- வரையிலும், ஒரு ஏக்கர் மரவள்ளி பயிருக்கு ரூ.787.18- வரையிலும் மட்டுமே செலுத்தினால் போதும் மீதமுள்ள காப்பீட்டுத் தொகையை மத்திய மாநில அரசுகளே செலுத்துகின்றன. வாழை, மரவள்ளி பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் 28.02.2023 ஆகும்.

எனவே, விவசாயிகள் நடப்பு ராபி பருவத்தில் பயிர் செய்த வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்குக் காப்பீடு செய்ய அதற்குரிய பிரிமியத் தொகை, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றுடன் அருகிலுள்ள தொடக்க வேளாண் கடன் மற்றும் கூட்டுறவு சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி விரைந்து காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top