Close
நவம்பர் 22, 2024 11:18 காலை

தீபாவளிக்கு முதல் நாள்… புதுக்கோட்டையில் அலை மோதிய கூட்டம்…

புதுக்கோட்டை

தீபாவளிக்கு முதல் நாளில் புதுக்கோட்டை கீழராஜவீதியில் திரண்ட மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டையில் பண்டிகைக்கான ஜவுளிகள், பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் கீழராஜ வீதி, மேலராஜ வீதி, வடராஜ வீதி, தெற்கு ராஜ வீதி ஆகிய வீதிகளில் ஆயிரக்கணக்கிலான மக்கள் கூட்டம்  அலைமோதியது.

புதுக்கோட்டை
கீழராஜவீதியில்..

பண்டிகைக்காக சாலையோர கடைகளும் ஆங்காங்கே போடப்பட்டுள்ளன. பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top