Close
நவம்பர் 22, 2024 8:40 மணி

புதுக்கோட்டை வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் கொடியேற்றம்  

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் யொட்டி 24.10.2022 சன்மார்க்க கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது

புதுக்கோட்டை பல்லவன்குளம்  அருகே  அமைந்துள்ள வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில்      (ஐப்பசி-7)  சன்மார்க்க கொடி தினத்தையொட்டி 24.10.2022  சன்மார்க்க கொடி ஏற்றும்  நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாத்தூர் வள்ளலார் மாணவர்  இல்ல கௌரவ தலைவர் டாக்டர் ராம்தாஸ்  பங்கேற்று சன்மார்க்க கொடியை ஏற்றி வைத்தார்.   மழையூர் சதாசிவம், பெரியநாயகி   சன்மார்க்க கொடிபாடல்  பாடினர்கள்.

நிகழ்வில் இணைச்செயலாளர் திருநாவுக்கரசு,பொருளாளர் முனியமுத்து,ஆவணம் ராஜேந்திரன்,குளத்தூர் பரமசிவம், மற்றும் முத்துலெட்சுமிஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
சன்மார்க்க கொடிபற்றி…      சன்மார்க்க கொடி என்பது மஞ்சள் வண்ணமும், வெள்ளை வண்ணமும் உடையது. கொடியின் நான்கில் ஒரு பகுதி – மேல் பாகம் மஞ்சள் வண்ணமும், நான்கில் மூன்று பகுதி கீழ் பாகம் வெள்ளை வண்ணமும் உடையது.
முதன் முதலில் இக்கொடியை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்தவர் வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகளாவர். இவர் மஞ்சள், வெள்ளை ஆகிய இருநிறங்கொண்ட கொடியை மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகை என்னும் இடத்தில் (வடலூருக்கு அருகாமையில் உள்ளது.) 22.10.1873 \ஆண்டு ஐப்பசித் திங்கள் 7 -ஆம் நாள் \ முதன் முதலாக இக்கொடியைக் காட்டி பேருபதேசம் ஒன்றையும் செய்தருளினார்.

சன்மார்க்கத்தின் முடிந்த முடிவான கொள்கைகளைக் கொண்ட அவ்வுபதேசம் மஹாபதேசம், பேருபதேசம் என வழங்கப்பெறுகிறது. அவ்வுபதேசத்தின் சிறுபகுதியை இங்கே காண்போம்.
இக்காலமே சன்மார்க்க காலம்: இதற்குச் சாட்சியாக இப்போது தான் சன்மார்க்க கொடி கட்டிக் கொண்டது. இக்கொடி உண்மையில் யாது எனில் நமது நாபி (கொப்புழ்) முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி இருக்கின்றது. அந்த நாடி நுனியில் புருவ மத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது.

அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம், மேல்புறம் மஞ்சள் வர்ணம், அச்சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும், இறங்கவும் இருக்கின்றது. இக்கொடி நம் அனுபவத்தின் கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளி முகத்தில் அடையாள வர்ணமாகக் கொடி கட்டியது. இனி எல்லோருக்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.

சுத்த சன்மார்க்க கொடி என்பது இதுபோல் ஓர் காலத்தில் ஏற்றி பின் இறக்குவது இல்லை. என்றுமே ஏற்றியே இருக்கும். அக்கொடியின் உண்மை சுத்த சன்மார்க்க அனுபவத்தில் ஆன்ம அறிவில் விளங்கும்.

அது எப்படி எனில் சன்மார்க்க அனுபவம் என்பது எப்பொழு தும் நம் மனதை புருவ மத்தியில் நிறுத்தி, நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் இறை உணர்வு கலந்து, உயிர்கள் அனைத்தையும் தன் உயிர்போல் நேசிக்கும் குணத்தைப் பெற்று, நமது ஒவ்வொரு செயலிலும் இரக்கத் தையும் பொது நோக்கையும் வெளிப்படுத்திய வண்ணம் வாழ்ந்து வருவதே சன்மார்க்க வாழ்வு பெற அனுபவ முறை யாகும். இவ்வாழ்வைப் பெற்றவர்களுக்கு இக்கொடியின் உண்மை நன்கு விளங்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top