Close
நவம்பர் 22, 2024 11:10 மணி

பத்திரிகையாளர்களின் நலன் காக்கும் முதல்வர்… நன்றி பாராட்டும் ஓய்வூதியதாரர்கள்…

தமிழ்நாடு

சென்னையில் பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்திட்டத்தை தொடக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பத்திரிகையாளர்களின் நலன் காக்கும் முதல்வர் ஸ்டாலின் என  ஓய்வூதியம் பெற்ற பத்திரிகையாளர்கள் நன்றி பாராட்டியுள்ளனர்.

பத்திரிகையாளர்களின் பணியினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர் களை முன்களப் பணியாளர்களாக தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் அறிவித்தார். மேலும், 2021-22-ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத் துவதோடு, நல வாரிய உதவித்தொகைகள், நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டு, அதன்படி பத்திரிகையாளர் நல வாரியம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது: பத்திரிகையாளர் களின் நலனில் அதிக அக்கறை கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பணிக் காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப நிதிஉதவியை 3 இலட்சம் ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது.

பத்திரிகையாளர் நல நிதியத்திற்கென தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் நிரந்தர நிதியாக வைப்பீடு செய்யப்பட்டு இத்தொகையின் மூலம் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையி லிருந்து பத்திரிகையாளர்களுக்கு நிதியுதவி.

கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையின்போது பணியாற்றிய பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வீதம் 5782 பத்திரிகையாளர் களுக்கு மொத்தம் 2 கோடியே 89 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கியது.

கொரோனா நோய்த் தொற்றால் இயற்கை எய்திய பத்திரிகை யாளர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகையை 5 இலட்சம் ரூபாயிலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி, 20 பத்திரிகையாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, தலா 10 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 2 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கியது.

பத்திரிகைத் துறையில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டில் சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் குறைந்த வாடகையில் வீடுகள் ஒதுக்கீடு, பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து வழங்கப்படும்.

மருத்துவ உதவித் தொகையை 2 இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது, பத்திரிகை யாளர் அங்கீகார அட்டை பெற்றுள்ள அனைத்துப் பத்திரிகை யாளர்களுக்கும் கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டைகள் போன்ற பல்வேறு திட்டங்களை பத்திரிகையாளர்களின் நல்வாழ்விற்காக செயல்படுத்தி வருகிறது.

அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வை க்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க, அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.10,000- ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

2022-23-ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு 3 இலட்சம் ரூபாயிலிருந்து 4 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் செய்தி முகமைகள் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை  தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார். அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர். தமிழ்செல்வம்,  லெ.ராஜ் (எ) ரங்கராஜ் என்கிற 2 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைகளை வழங்கினார்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த  ஆர்.தமிழ்செல்வம்  கூறியது:

தமிழ்நாடு
தமிழ்செல்வம்

நான் பல ஆண்டு காலமாக மாலைச்சுடர் தினசரி நாளிதழில் மாவட்ட செய்தியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றேன். மகத்தான பத்திரிகையாளர் ஓய்வூதியம் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூபாய் 10,000 ஓய்வூதியம் பெற்று வருகின்றேன். இந்த உதவித் தொகையானது எனது குடும்ப அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் உதவிகரமாக உள்ளது. இதன் மூலம் குடும்பத்தின் முக்கிய செலவுகளில் இந்த உதவித்தொகையானது பெரும் பங்களிப்பு வகிக்கிறது. இந்த சிறப்புமிக்க ஓய்வூதிய திட்டத்தை வழங்கிய  தமிழக முதலமைச்சர் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த  லெ.ராஜ் (எ) ரங்கராஜ் தெரிவித்ததாவது :

தமிழ்நாடு
ராஜ்

நான் மாலை முரசு மற்றும் ஜனநாயக காவலன் பத்திரிக்கையில் பல ஆண்டு காலமாக மாவட்ட நிருபராக வேலை பார்த்து உள்ளேன் தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவித்த ஓய்வு ஊதிய திட்டத்தின் மூலம் மாதம் மாதம் ரூபாய் 10,000 பெறுகின்றேன். இந்த உதவித்தொகையின் மூலம் எனது குடும்ப பொருளாதாரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த மகத்தான பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் திட்டத்தை வழங்கியதமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார் என தஞ்சாவூர்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top