புதுக்கோட்டை நெல்லு மண்டி தெருவில் அதிமுக ஓபிஎஸ் அணியின் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ராஜசேகரன் கட்டியிருந்த மாவட்ட அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் அதிமுக வினை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சர் மன வைத்தியலிங்கம் வருகை தந்து எம்ஜிஆர் சிலை மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் கட்சியை அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் மேலும் கூறியதாவது: வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் விரைவில் ஒன்று சேர்வோம்
இதில், ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன் முதல் சசிகலா எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் வரை அனைவரும் இருப்பார்கள். ஒன்றிணைய எடப்பாடி பழனிச்சாமி ஒத்துழைக்கவில்லை என்றால் அவர் தனிதது விடப்படுவார்.
நாடாளுமன்ற தேர்தலை பாரதிய ஜனதா கட்சி தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இணைந்துதான் அதிமுக சந்திக்கும். ஒருங்கிணைப் பாளராக ஓபிஎஸ் இருப்பார்40 தொகுதிகளின்நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்றார் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் பேட்டி