Close
நவம்பர் 22, 2024 6:00 காலை

புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்க நிர்வாகி  டாக்டர் சலீம்  உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கம் விருதளிப்பு

புதுக்கோட்டை

மாநில விருது பெற்ற இந்திய மருத்துவ சங்க புதுக்கோட்டை கிளை நிர்வாகிகள்

புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்கத்திற்கும்   டாக்டர் சலீம்  உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு  விருதுகள் வழங்கப்பட்டது.
சென்னையில்  இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு மாநில மருத்துவ மாநாடு சென்னை வர்த்தக மையத்தில்  மாநில சங்கத் தலைவர் மருத்துவர் பழனிச்சாமி  தலைமையில் (17.12.2022) நடைபெற்றது.
விழாவில்  இந்திய மருத்துவ  சங்க புதுக்கோட்டை கிளைக்கு பத்து விருதுகள் வழங்கப்பட்டன. அதில் இந்திய மருத்துவ சங்கம்  மக்கள் சேவையில் சிறப்பாக செயல்பட்டதற்கு தனியார் மருத்துவமனைகள் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சலீம், சங்கத் தலைவர் டாக்டர் சுவாமிநாதன், செயலாளர் டாக்டர் முகமது சுல்தான்.
நிதி செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், டாக்டர் நவரத்தினசாமி, டாக்டர் ஆறுமுகம், டாக்டர் சரவணன் மற்றும் டாக்டர்  சுரேஷ்குமார் உள்ளிட்டோருக்கு, மாநில சங்கத் தலைவர் மருத்துவர் பழனிச்சாமி விருதுகளை வழங்கி பாராட்டினார்.
நிகழ்வில்மாநில தலைவர் தேர்வு மருத்துவர்  செந்தமிழ் பாரி,  செயலாளர் மருத்துவர் தியாகராஜன், நிதி செயலாளர் அழகா வெங்கடேசன் மற்றும் மாநில நிர்வாகிகள்  தமிழக முழுவதும் உள்ள மருத்துவ சங்கத்தில் ஏராளமான மருத்துவர்கள் . கலந்து கொண்டார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top