Close
செப்டம்பர் 20, 2024 4:06 காலை

விருதுநகர் மாவட்டம காரியாபட்டியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

விருதுநகர்

காரியாபட்டியில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் மல்லாங்கிணறில் நடைபெற்றது.

அவைத்தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். துணைச்
செயலாளர் உப்பிலிக்குண்டு குருசாமி வரவேற்றார்.

கூட்டத்தில், திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகன்  நூற்றாண்டு விழாவினை கொண்டாடுவது, தமிழக அமைச்சராக பொறுபேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரமாக பணியாற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கிழக்கு ஒன்றியச் செயலாளர் செல்லம், மாவட்டக் கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், யூனியன் துணைத் தலைவர்ராஜேந்திரன்,மல்லாங்கிணறு பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் அரசகுளம் சேகர், சிதம்பர பாரதி முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top