Close
நவம்பர் 25, 2024 7:24 காலை

பாண்டிச்சேரியில்  சென்ஸ் ஷைன் நிறுவனத்துடன் கூட்டு வகிப்பில் தொடங்கிய டர்ட்டில் வேக்ஸ் இந்தியா நிறுவனம்

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரியில் தொடங்கப்பட்டுள்ள கார்கேர் நிறுவனம்

பாண்டிச்சேரியில்  சென்ஸ் ஷைன் நிறுவனத்துடன் கூட்டு வகிப்பில் இணையும் டர்ட்டில் வேக்ஸ் இந்தியா நிறுவனம்.

மிக நவீன எளிதில் பயன்படுத்தக்கூடிய டர்ட்டில் வேக்ஸ் தயாரிப்புகளோடு பிரத்யேகமாக வழங்கப்படும் வாகனங் களுக்கான தூய்மை மற்றும் பாதுகாப்பு சேவைகள் எனபல விருதுகள் வென்ற கார் கேர் நிறுவனமான டர்ட்டில் வேக்ஸ் சென்ஸ் ஷைன் எல்எல்பி நிறுவனத்துடனான கூட்டாண்மையில் பாண்டிச்சேரியில் இணை – பிராண்டு அடிப்படையில் அதன் முதல் ஸ்டுடியோ தொடங்கப்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறது.

டர்ட்டில் வேக்ஸ்இ யுஎஸ்ஏ – ன் சிகாகோவில் தலைமையகத் தைக் கொண்டு செயல்படும் உலகப்புகழ் பெற்ற ஒரு கார் கேர் நிறுவனமாகும். 372 ,கடலூர் – பாண்டிச்சேரி மெயின் ரோடு, கிருமம்பாக்கம் பாகூர், புதுச்சேரி – 607402 என்ற முகவரியில் இந்த கார் கேர் ஸ்டுடியோ அமைந்திருக்கிறது.

கார் உட்பட வாகனங்களுக்கான தூய்மை மற்றும் பாதுகாப் புக்கான மிக நவீன டர்ட்டில் வேக்ஸ் டீடெய்லிங் தொழில்நுட்பங்கள் மற்றும் உயர்தகுதியும் சிறப்பு பயிற்சியும் பெற்ற சர்வீஸ் பணியாளர்கள் குழு ஆகியவற்றின் மூலம் கார் டீடெய்லிங் சேவைகள் மற்றும் தயாரிப்புகளின் ஒரு விரிவான தொகுப்பை இந்த டர்ட்டில் வேக்ஸ் கார் ஸ்டுடியோ வழங்கும். கார் ஆர்வலர்களின் தனித்துவமான ரசனை மற்றும் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் இதன் தயாரிப்புகள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது.

டர்ட்டில் வேக்ஸ் – ன் டீடெய்லிங் செயல்பாட்டின் தனித்துவ அம்சங்களான புத்தாக்கம் மற்றும் நிபுணத்துவத்தோடு ஒருங்கிணைந்து இவ்வகையினத்தில் மிகச்சிறந்த தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவை வழியாக பணத்திற்கு மிகச்சிறந்த மதிப்பினை வழங்கும் நோக்கத்தோடு கார்கேர் மற்றும் டீடெய்லிங் தொழில்துறையில் சென்ஸ் ஷைன் எல்எல்பி பெருமிதத்துடன் தனது நுழைவை அறிவித்திருக் கிறது.

தொழில்முறை நிபுணத்துவத்துடன் வாகன பராமரிப்பு மற்றும் தூய்மைக்கான நுகர்வோர்களின் தேவைகளை இதன்மூலம் திறம்பட பூர்த்தி செய்ய இது முனைப்புடன் செயலாற்றும்.  டர்ட்டில் வேக்ஸ் நிறுவனத்தின் செராமிக் மற்றும் கிராபின் அணிவரிசையிலிருந்து பல்வேறு கேர் பேக்கேஜ்களை இந்த ஸ்டுடியோ வழங்கும்.

இதற்கு முன் எட்டப்படாத சிறப்பான பலன்களை வழங்க மிக சமீபத்திய நவீன தொழில்நுட்பங்களை இந்த ஸ்டுடியோ பயன்படுத்துவது இதன் தனிச்சிறப்பாகும்.

உலகளவில் லட்சக்கணக்கானவர்களின் அபிமானம் பெற்ற டர்ட்டில் வேக்ஸ் நிறுவனத்தின் தூய்மை மற்றும் பராமரிப்பு தயாரிப்புகளான ஹைபிரிட் சொல்யூஷன்ஸ் புரோ ஆகிய வற்றை காப்புரிமைக்காக விண்ணப்பித்திருக்கும் கிராஃபிங் தொழில்நுட்பத்தைக் கொண்டு வழங்கப்படும் தொழில்முறை நிபுணத்துவம் மிக்க சர்வீஸ் அனுபவத்தை கார் கேர் ஸ்டுடியோவில் வாடிக்கையாளர்கள் பெற்று பயனடைவார்கள் என்பது நிச்சயம்.

பாண்டிச்சேரி
சென்ஸ் ஷைன் நிறுவனத்துடன் கூட்டுவகிப்பில் பாண்டிச்சேரியில் தொடங்கப்பட்டுள்ள டர்ட்டில் வேக்ஸ் இந்தியா கார்கேர் நிறுவனம்

டர்ட்டில் வேக்ஸ் கார் கேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் – ன் மேலாண்மை இயக்குனர் சஜன் முரளி புரவங்கரா இந்த ஸ்டுடியோவின் தொடக்கம் குறித்து கூறியதாவது: தென்னிந்தியாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து கார் கேர் செயல்பாடுகள் மீது ஆர்வம் அதிவேகமாக வளர்ச்சி கண்டிருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

எனவே, புதுச்சேரியில் எமது முதன் முதல் கார் கேர் ஸ்டுடியோவை திறக்க நாங்கள் முடிவு செய்தோம். இந்த புத்தம் புதிய ஸ்டுடியோ வழியாக, புதுச்சேரி துணை நிலை மாநிலம் முழுவதிலும் இவ்வகையினத்தில் ப்ரீமியம் தரத்திலான கார் தூய்மை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான சேவைகளை வழங்குவது எங்களது இலக்காகும்.

இந்த தனிச்சிறப்பான சேவைகளை அனுபவித்து பயனடை வதற்கு வகையினங்கள் மற்றும் தயாரிப்புகளின் மிகப்பெரிய அணிவரிசையை கைவசம் கொண்டிருப்பதில் இந்த பிராண்டு பெருமை கொள்கிறது. இப்பிராந்தியத்தில் சிறந்த கார் கேர் சேவைகளையும் மற்றும் பலன்களையும் வழங்குவ தற்கு சென்ஸ் ஷைன்- எல்எல்பி நிறுவனத்துடனான எமது கூட்டாண்மை வழிவகுக்கும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்.

எமது டீலர் வலையமைப்பில் பெருமிதம் கொண்டிருக்கும் நாங்கள் இனிவரவிருக்கும் ஆண்டுகளிலும் இதனை தொடர்ந்து வலுப்படுத்துவோம். இந்நாட்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கிலுள்ள நகரங்களிலும் எமது செயல் நடவடிக்கையைத் தொடங்க நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம்.
சாலையில் தங்களது பயணத்தை தொடங்குவதற்கு முன்பு ஒரு விரைவான தூய்மையான மற்றும் புத்துணர்வூட்டும் உணர்வைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் இப்போது டர்ட்டில் வேக்ஸ்கார் கேர் ஸ்டுடியோவிற்கு தங்களது வாகனங்களை கொண்டு வரலாம்.

வாகனத்தின் பாடி பெயிண்ட்டிற்கு தீங்கு விளைவிக்காத வையாக டர்ட்டில் வேக்ஸ் தயாரிப்புகள் இருக்கின்றன. அத்துடன் மிகக்கடுமையான பருவநிலை மாற்றங்களையும் தாக்குப்பிடிக்கக்கூடிய திறன் கொண்டவையாக இவைகள் இருக்கின்றன. கீறல்கள், பளபளப்பின்மை மற்றும் பருவநிலை சூழல்கள் ஆகியவற்றிலிருந்து வாகனங்களின் வெளிப்புறத்திற்கான பாதுகாப்பை இத்தயாரிப்புகள் வழங்குகின்றன.

மனநிறைவு வழங்கும் டிரைவிங் அனுபவத்திற்கு காரின் உட்புறத் தூய்மையும் அது சமமான அளவிற்கு அத்தியாவசியமானது. எனவே, வாகனங்களின் உட்புற தூய்மை மற்றும் பராமரிப்பிற்கான தயாரிப்புகள் அணிவரிசையையும் டர்ட்டில் வேக்ஸ் கொண்டிருக்கிறது என்றார் அவர்.

சென்ஸ் ஷைன் எல்எல்பி நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டன் கலியப்பெருமாள் பேசுகையில்:கார் கேர் துறையில் உலகளவில் முதன்மை வகிக்கும் நிறுவனமான டர்ட்டில் வேக்ஸ் நிறுவனத்துடன் கூட்டாண் மையில் இணைவதிலும் மற்றும் அதன் பிரதிநிதியாக இங்கு செயல்வடுவதிலும் சென்ஸ் ஷைன் எல்எல்பி நிறுவனத்திலுள்ள நாங்கள் பெருமகிழ்ச்சியும் உற்சாகமும் கொண்டிருக்கிறோம்.

கார் கேர் செயல்பாடுகளில் உலகளாவிய சிறந்த தரநிலை களை ஆராயவும் மற்றும் அனுபவிக்கவும் வாடிக்கையாளர்க ளுக்கு சிறந்த வாய்ப்பை டர்ட்டில் வேக்ஸ் உடனான இந்த ஒத்துழைப்பும் கூட்டாண்மை செயல்பாடும் வழங்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். டர்ட்டில் வேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிறப்பான சேவையை வழங்கு வதற்கு இது எங்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு என்றார் அவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top