Close
செப்டம்பர் 20, 2024 3:53 காலை

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் வடக்கு மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் நியமன கடிதம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் மக்களிடம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் அய்யா மற்றும் சின்ன அய்யா  அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் அரசியல் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க அயராது பாடுபட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் பிரபு, நகரச் செயலாளர் குமரேசன், நகரத்தலைவர் முருகராஜ், மாவட்ட இளைஞரணி சுந்தர்ராஜ், நகரத் துணைச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top