புதுகை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடை பெற்ற கிறிஸ்து பிறப்பு விழாவில் பங்கற்ற பங்கு தந்தையர்
புதுக்கோட்டையிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்க ளிலும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஏசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.
மாா்த்தாண்டபுரத்திலுள்ள திருஇருதய ஆண்டவா் தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் கூடினா்.
அங்கு, இயேசு கிறிஸ்து பிறப்பு போன்ற குடில் அமைக்கப் பட்டிருந்தது. தொடா்ந்து நள்ளிரவு 12.01-க்கு இயேசு கிறிஸ்து பிறந்ததாக அறிவிக்கப்பட்டது. மறைவட்ட அதிபரும், பங்குத் தந்தையுமான பேரருள்திரு சவரிநாயகம் மறையுரை வழங்கினாா். சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றது.
இதேபோல, ராஜகோபாலபுரத்திலுள்ள ஜெபமாலை மாதா ஆலயத்திலும், மச்சுவாடியிலுள்ள குழந்தையேசு திருத்தலத்திலும், திருக்கோகா்ணம் சந்தியாகப்பா் ஆலயத்திலும் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
மேலும், மச்சுவாடியிலுள்ள தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபையின் சீயோன் ஜூப்ளி தேவாலயத்திலும், புதுக்கோட்டை கணபதி நகரிலுள்ள தென்னிந்திய திருச்சபையின் தேவாலயத்திலும் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்து பிறப்பு சொல்லும் செய்தி…
கிறிஸ்தவர்கள் இயேசுவைக் கடவுளின் மகன் என்றும், கிறித்தவ விவிலியத்திலுள்ள பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மெசியா என்றும் நம்புகின்றனர்.பெத்ல கேம் எனும் சிற்றூரில் தச்சர் யோசேப்புக்கும், மரியாளுக்கும் மகனாகப் பிறந்தவர் இயேசு. யோசேப்புக்கு மனைவியாக நியமிக்கப்பட்ட மரியாளின் வயிற்றில் தூய ஆவியால் நிரப்பப்பட்டு கன்னியின் மகனாய் இயேசு பிறந்தார். எனவே இயேசு கடவுளின் குமாரனாய் இவ்வுலகில் வந்தார் என்பதே நம்பிக்கையின் செய்தி.
இயேசு பிறந்தார் என்ற செய்தி இவ்வுலகில் முதன்முதலாக ஆடுகளை வயல்வெளியில் மேய்த்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு இறைத் தூதரால் அறிவிக்கப்பட்டது. ‘அப்பொழுது குழந்தையை முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்’ என்பதே செய்தியாகியது. அதே வேளையில் வானத்தில் ஒரு நட்சத்திரம் தோன்றியதைக் கண்ட வான சாஸ்திரிகள், மேசியா அதாவது, இரட்சகர் பிறந்துள்ளார் என்பதை அறிந்து, ஏரோதுவின் அரச மாளிகைக்கு குழந்தையைக் காணச் சென்றனர்.
இந்தப் பிறப்பின் செய்தி நமக்கு இன்று கூறுவது என்ன வென்றால் ஏழை-பணக்காரன், ஆண்டான்-அடிமை, ஆண்-பெண், வெள்ளை-கருப்பு சாதிய வேறுபாடுகள் என்றும், இனம், மொழி என்ற நிலையில் வன்முறைக் கலாசாரங்கள் நிலவி வரும் சூழலில், அனைத்து மக்களும் ஒற்றமையுடன் வாழவும், ஒன்றாக, நிறைவாக அனைத்தையும் பகிர்ந்து வாழவும் வேண்டும் என்பதே ஆகும்.