Close
செப்டம்பர் 20, 2024 7:06 காலை

மாநில சதுரங்கப்போட்டி… புதுக்கோட்டை மாணவர் சாதனை..

புதுக்கோட்டை சதுரங்க கழக  வீரர்   மாணவர் ரா.ஹரிஷ்ராம் மாநில அளவில் முதலிடம் வென்று சாதனை படைத்தார்.

தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழகம், பாபநாசம் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய சிவஞான முதலியார் நினைவு மாநில அளவிலான சதுரங்க ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து சதுரங்க வீரர்கள் கலந்து கொண்டனர்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சதுரங்க கழக சார்பில் மாணவ, மாணவிகள், சதுரங்க வீரர்கள்  கலந்து கொண்டனர். புதுக்கோட்டை சதுரங்க அகாடமி பயிற்சி மாணவர்  ரா.ஹரிஷ்ராம் 11 வயது பிரிவு போட்டியில்  மாநில அளவில் முதலிடம் பிடித்து  சாதனை படைத்தார்.

பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற பல்வேறு வீரர்கள்  விருது மற்றும்  சான்றிதழ் பெற்றனர்.   மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர் ரா.ஹரிஷ்ராமுக்கு  மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துச்செல்வம் பாராட்டி விருது வழங்கினார்.

மேலும், பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர்  அறிவழகன், சதுரங்க கழக தலைவர் செந்தில்குமார்பழனிவேலு,  சதுரங்க கழக செயலாளர் தர்மசிலம்பரசன்,   மாநில  சதுரங்க கழக  நிர்வாகி  பால குணசேகரன்,   புதுக்கோட்டை    சதுரங்க கழக செல்வம்    மற்றும் புதுக்கோட்டை சதுரங்க அகாடமி பயிற்றுனர்கள்,   மாணவனின்  பெற்றோர் ராமநாதன் ஷாலினி ஆகியோர்  பாராட்டு தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top