Close
நவம்பர் 22, 2024 1:15 மணி

விவசாய நிலத்தில் களப்பயிற்சி மேற்கொண்ட வேளாண் கல்லூரி மாணவிகள்

வேலூர்

பேர்ணாம்பட்டு அருகே மசிகம் கிராமத்தில் களப்பயிற்சியில் ஈடுபட்ட பாலாறு வேளாண் கல்லூரி மாணவிகள்

பாலாறு வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாய நிலத்தில் நேரடி களப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

பேர்ணாம்பட்டு அருகே மசிகம் கிராமத்தில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாய நிலத்தில் நேரடி களப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த மேல்பட்டி அருகே பாலாறு வேளாண் கல்லூரியில் 4 -ஆம் ஆண்டு பயிலும் மாணவிகள் ரம்யா, மோனிஷாதாயனி, ராதிகா, மோனிஷா, ரஞ்லின் கிரேஷ்மா, பவித்ரா, நிவேதா, ரஞ்சினி, சரண்யா சங்கீர்த்தனா ஆகிய 10 பேர் கொண்ட குழுவினர், முதல்வர் ஹரி பிரசாத் அறிவுரையின்படி  பேர்ணாம்பட்டு அடுத்த மசிகம் கிராமத்தில், தங்கி களப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த களப்பணியின் போது முக்கிய தழைச்சத்து உரமான நானோ யூரியாவை பயன்படுத்துவது குறித்தும், அதனை கையாளும் முறை குறித்தும், வயலில் இறங்கி நாற்று நட்டு, பயிர் விளைச்சலை அதிகப்படுத்தும் முறைகள் மற்றும் தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்ட திருத்திய நெல் சாகுபடி முறை குறித்தும்  செயல் விளக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர் நிருபர்–

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top