புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சண்முகநாதன் பொறியி யல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கான நேரடி வளாக நேர்காணல் மே.12 (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்களில் 37 மாணவர்கள் தேர்வு பெற்றனர்.
கல்லூரி முதல்வர் டாக்டர் குழ.முத்துராமு, வளாக நேர்காணலில் பங்கேற்ற மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்தினார்.
இந்தவளாக நேர்காணலில் சென்னையைச் சேர்ந்த டாகோ மேகா கன்ஸ்ட்ரக்சன் பிரைவேட் லிமிடெட், எஸ்.என்.ஒய். ஆட்டோடெக் பிரைவேட் லிமிடெட், டோங்-ஆ எலக்ட்ரிக். பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டன.
இந்நிறுவங்களின் மனிதவளத்துறை மேலாளர்கள் டாக்டர் வில்லியம், பாஸ்கர், நட்ராஜ் ஆகியோர் இவ்வளாக நேர் காணலை தனித் தனியாகநடத்தினர். இந்த நேர்காணல் எழுத்துத்தேர்வு, கலந்தாய்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய மூன்று கட்டங்களாக நடைபெற்றது.
இந்தவளாக நேர்காணலில் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும்அனைத்து துறை மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவ்வளாகநேர்காணலில் இறுதியில் 37 மாணவ, மாணவியர் தேர்வு பெற்றனர். அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை கல்லூரி தாளாளர் டாக்டர் பிச்சப்பா மணிகண்டன் வழங்கி பாராட்டினார்.
முன்னதாக கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ஆர்.சொர்ணலதா வரவேற்றார். நிறைவாக கல்லூரி உதவி வேலைவாய்ப்பு அலுவலர் திவ்யசொப்னா நன்றி கூறினார்.ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக் குழுவினர் செய்திருந்தனர்.