Close
செப்டம்பர் 20, 2024 3:47 காலை

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே நடந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்தி செல்வம் தலைமையில் கொடிவயல், திருநாவலூர், சிட்டங்காடு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி  ராமதாஸ் ஆகியோரால்  புதுக்கோட்டை மாவட்ட கிழக்கு ஒன்றிய பகுதிகளில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து புதிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.  அதில் புதிய நிர்வாகிகளுக்கு நியமன கடிதத்தினை வழங்கினர்.

மேலும் பாட்டாளி மக்கள் கட்சி வளர்ச்சிக்கு அயராது பாடுபட வேண்டும் என்றும் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் அதிகளவில் சேர்த்து பாட்டாளி மக்கள் கட்சி வலுப்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் இக்கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட அறந்தாங்கி ஒன்றிய செயலாளர்கள் சீ.பழனிக்குமார் (கிழக்கு) வீ.ரெங்கநாதன் (வடக்கு) ஒன்றியம் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்து நியமன சான்றிதழ் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top