Close
செப்டம்பர் 20, 2024 5:40 காலை

புதுக்கோட்டையிலுள்ள பல்வேறு கோவில்களில் புத்தாண்டு  சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை

புத்தாண்டையொட்டி திருவப்பூர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள்

புதுக்கோட்டையிலுள்ள பல்வேறு கோவில்களில் நடைபெற்ற புத்தாண்டு  சிறப்பு வழிபாடுகளில் திரளான  பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டையிலுள்ள பல்வேறு கோவில்களில் புத்தாண்டு 2023  வருட பிறப்பை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தன. புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ  முத்துமாரியம்மன் கோயிலில் புத்தாண்டு (2023) பிறப்பை யொட்டி அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு  பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடந்தது .
பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள்  வருகைதந்து  நீண்ட  வரிசையில் காத்திருந்து  தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
புதுக்கோட்டை குமரமலை பாலதெண்டாயுதபாணி திருகோயிலில் புத்தாண்டு 2023 வருட பிறப்பை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ஏற்பாடுகளை பாலாஜி வைரவமூர்த்தி  மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
புதுக்கோட்டை  சாந்தநாத சாமி திருக் கோவில்   மேல ராஜ வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் திருக்கோகர்ணம்  பிரஹதாம்பாள் திருக்கோவில்  பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் திருக்கோவில் திருக்கோகர்ணம்  கோவில்பட்டி மஹா ஸ்ரீ திரிசூல பிடாரிஅம்மன் கோவிலில்   தெற்கு 4 ம் வீதி  ஆஞ்சிநேயர்  திருக் கோவில் உள்ளிட்ட கோவில்களில் புத்தாண்டு 2023 வருட பிறப்பை யொட்டி  சிறப்பு வழிபாடு  நடைபெற்றது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top