Close
செப்டம்பர் 20, 2024 5:54 காலை

புதுக்கோட்டை  பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில்    புத்தாண்டு கொண்டாட்டம்  

புதுக்கோட்டை

புதுகை பேலஸ்சிட்டி ரோட்டரி சார்பில் நடைபெற்ற புத்தாண்டு விழா

புதுக்கோட்டை  பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில்    புத்தாண்டு கொண்டாட்டம்   நடைபெற்றது.

புதுக்கோட்டை  பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில்    புத்தாண்டு 2023 தின கொண்டாட்டம்   ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்பள்ளி  வளாகத்தில்    தலைவர்  வேலுசாமி  தலைமையில்  நடைபெற்றது

அனைவரையும் செயலாளர்  வரவேற்றார்.   துணை ஆளுநரும் பாரதிதாசன் பல்கலைக்கழக  செனட் உறுப்பினருமான  பேராசிரியர் கருப்பையா முன்னிலை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக மண்டல செயலாளர்  விஆர்.வெங்கடாசலம் கலந்து கொண்டு பல்வேறு  போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்கள், சிறுமிகளுக்கும்  நங்கையர்களுக்கும் பரிசுகளும் வழங்கி பேசினார்

இந்நிகழ்வில் ரோட்டரி மண்டல செயலாளர்{ திட்டம் }  ஜி. எஸ். எம். சிவாஜி,  பட்டி மன்றபேச்சாளர் ஆசிரியர்  மகாசுந்தர்,   ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்ப்பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி, வழக்கறிஞர் செந்தில், பொருளாளர் ராஜேந்திரன், ஆர். கருணாகரன், உள்ளிட்டவர்கள்  புத்தாண்டு தின வாழ்த்துரை வழங்கினார்கள்.

பார்வதி ஜுவல்லர்ஸ் நகை கடைநிறுவனர்  முருகராஜ் புத்தாண்டு தினத்தையொட்டி நினைவு பரிசுகளை  அனைவருக்கும் வழங்கினார். முன்னதாக  பல்வேறு விளையாட்டு போட்டிகளை ஆசிரியர்கள் கந்தசாமி,  முத்துராமன்  நடத்தினார்கள்.

முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள்           கல்வி யாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.  நிகழ்ச்சியை ஆசிரியர் காசிநாதன் தொகுத்து வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top