Close
செப்டம்பர் 20, 2024 3:44 காலை

திமுக இளைஞர் அணி சார்பில் நோட்டு புத்தகங்கள் வழங்கல்

புதுக்கோட்டை

திமுக இளைஞரணி சார்பில் ராணியார் பள்ளியில் நடைபெற்ற விழா

திமுக இளைஞர் அணி சார்பில் புதுக்கோட்டை ராணியார்பள்ளி மாணவிகளுக்கு  நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை ராணியார் பள்ளி மாணவிகளுக்கு திமுக இளைஞரணி சார்பில் நோட்டு புத்தகங்களை அமைச்சர் ரகுபதி, எம்எல்ஏ முத்துராஜா, மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் ஆகியோர் வழங்கினர்

திமுக இளைஞரணி அமைப்பாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராணியார் பள்ளி பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவி நோட்டு புத்தகங்களை அமைச்சர் ரகுபதி ,எம்எல்ஏ முத்துராஜா, மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், நகராட்சி தலைவர்  திலகவதி, ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் சண்முகம், துணை அமைப்பாளர் வை நடராஜன், மாவட்ட பிரதிநிதி ராஜதுரை, நகர இளைஞரணி அமைப்பாளர் எஸ். செந்தில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் சண்முகம் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top