பெருந்துறை ஒன்றியம், சீனாபுரம் ஊராட்சிக்குட்பட்ட, தலையம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள நியாய விலைக்கடையில் தமிழக முதல்வர் அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கலந்து கொண்டு ரூபாய் 1000 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி தொடக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் பாலகிருஷ்ணன், சீனாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலர் ஹேமலதா சம்பத், மாவட்ட ஆட்சிக்கு ஒரு இயக்குனர் நாகராஜ், பொன்னுச்சாமி மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.