புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி இணை செயல்பாடுகளான யோகா, கராத்தே, சிலம்பம் வகுப்பு வகுப்புகள் நடந்த திட்டமிட்டு அதன்படி யோகா வகுப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிலம்பம் பயிற்சி தொடங்கப்பட்டது.
இத்தொடக்க நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்து, வரவேற்று பேசியதாவது: அக்கச்சிபட்டி பள்ளி மாணவர்களுக்கு கல்வி இணை செயல்பாடுகளில் சிலம்பம், யோகா, கராத்தே உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதற்கு தனியாக ஒரு பயிற்சியாளரை ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன் ஏற்பாடு செய்து மாலை வேளையில் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.
சிறப்பாக ஏற்பாடு செய்து மாணவர்களுக்கு வழங்கி வரும் ஊராட்சி மன்ற தலைவருக்கு வாழ்த்துகள்.மாணவர்கள் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் அவர்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன் , பாரத் கேஸ் கம்பெனி உரிமையாளர் விஜயராம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிலம்பம், யோகா, கராத்தே பயிற்சியினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கிப் பேசினர்.
சிறப்பு பயிற்சி அளிக்கும் ஆசிரியர் முத்து பேசும்போது, மாணவர்களுக்கு கல்வி இணை செயல்பாடுகளுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக சிலம்பம், யோகா, கராத்தே உள்ளிட்ட வகுப்புகள் தினந்தோறும் தோறும் மாலையில் நடைபெற்று வருகிறது.
தற்போது கராத்தே வகுப்புகள் முடிவடைந்து சிலம்பு வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகிறது. மாவட்ட, மாநில அளவிலான சிலபம், கராத்தே,யோகா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும்.
சிலம்பம், யோகா, கராத்தே போன்ற கல்வி இணை செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் உடல்நலம், மனநலம் சிறப்பாக இருக்கும் என்றும், யோகா பயிற்சி மூலம் மாணவர்களின் கற்றல் திறன்கள் மேம்படுவதோடு எதையும் பகுப்பாய்வு செய்யக்கூடிய திறன்கள் மாணவர்களுக்கு உருவாக முக்கிய பங்கினை யோகா உருவாக்கும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஆனந்தராஜ், ஆசிரியர்கள் நிவின், செல்விஜாய் ஆகியோர் செய்திருந்தனர். நிறைவாக ஆசிரியர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.