Close
செப்டம்பர் 20, 2024 7:20 காலை

புதுக்கோட்டை அறிவியல் இயக்கத்தில் கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய மாவட்டத்தலைவர் வீரமுத்து

புதுக்கோட்டையில்  அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையம்  திட்டம் மேம்படுத்துதல் கலந்தாய்வு கூட்டம்  நடந்தது.
புதுக்கோட்டையில்   அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையம் (CESTADS)   திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை உதவியுடன்  ஐக்கிய நாடுகள் சபையின் நிலைத்தகு வளர்ச்சிக்கான இலக்குகளை விளக்குவதற்கான பிரசார உபகரணங்கள் தயாரிப்பு  பயிற்சியின் திட்டம் மேம்படுத்து தல் கலந்தாய்வு  கூட்டம்  புதுக்கோட்டை அறிவியியல் இயக்கம் அரங்கில்  நடைபெற்றது.

அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையதிட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் ம.வீரமுத்து வரவேற்றார்.

நிகழ்வில்    எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர் ராஜ்குமார்,   அறிவியல் இயக்கத்தின் மாநிலம் பொதுக்குழு உறுப்பினர் மணவாளன், மாநில நிர்வாகிகள்  மற்றும் மாவட்டஅமைப்புகளின் பல்வேறு   நிர்வாகிகள் நீலா, தனிக்கொடி, சிவக்குமார் புதுகைபுதல்வன் பீர்முகமது மகேஸ்வரி, மதியழகன், அசோகன் மற்றும்  தமுஎகச நிர்வாகிகள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டு பல்வேறு   கருத்துகளை கூறினர். சிவக்குமார்  நன்றி  கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top