புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி கிராமத்தில் , பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானை உள்பட பலவிதமான பொருட்கள் விற்பனை வந்துள்ளன.
புதுக்கோட்டை அறந்தாங்கி செல்லும் சாலையில் மண்பாண்ட தொழிலாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் சாலையோரத்தில் பொங்கல் பானை சட்டி மட்டுமின்றி விதவிதமான அகல்விளக்கு, மண் அடுப்பு, குடிநீர் ஜாடிகள், திருஷ்டி பொம்மைகள் மற்றும் சிறிய சுவாமி சிலைகள் விற்பனை செய்கின்றனர்.
இவர்கள் விற்பனைக்காக மண்பாண்டங்களை சாலை யோரத்தில் மக்கள் பார்வைக்கு அடுக்கி வைத்துள்ளனர். இதனால் நெடுந்தூரத்தில் இருந்து வாகனங்களில் வரும் வெளியூர் மக்கள் இதனை கண்டு நிறுத்தி வாங்காமல் சென்றதில்லை.
இந்நிலையில் இப்பகுதி மண்பாண்டக்கலை தொழிலாளர்கள் பாரம்பரியமாக இத்தொழில் நுட்பம் தெரிந்து ஆர்வத்துடன் பிழைப்பு நடத்தி வந்தாலும் போதிய வருவாய் பார்க்க இரவு பகலாக உழைக்க வேண்டியுள்ளது.
கிராமங்களில் மட்டுமே மண்பாத்திரங்கள் மக்களிடம் புழக்கத்தில் உள்ளன. ஆங்காங்கே பல்வேறு தொழில் செய்பவர்கள் கூட இந்த மண் பாண்டங்களை விற்பனை செய்யத் துவங்கி விட்டனர். பொங்கல் பண்டிகை என்றால் இந்த மண்பாண்டங்கள் மீது அனைத்து தரப்பினரின் கவனம் பெறும். அதேபோல் சோறு, கறி குழம்பு எதுவானாலும் மண்பாண்டங்களில் சமைத்து சாப்பிட்டால் அதன் ருசியே தனிதான்.இரண்டு நாட்கள் ஆனாலும் சுவை கூடுமே தவிர கெட்டுப்போக வாய்ப்பில்லை.
மண்பாண்ட தொழிலில் பல்வேறு சிரமங்கள் இருந்தும் தளராத மனதுடன் பொங்கலை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி சென்றாண்டுகளை போலவே விதவிதமான மண்பாண்டங்களை தயார் செய்து, சாலையோரத்தில் விற்பனைக்காக அடுக்கி வைத்துள்ளனர்.
இந்தநிலையில் பொங்கலுக்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில் வியாபாரம் மந்தமாக இருப்பதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். அதேபோல் இப்பகுதியில் கார் மற்றும் வாகனங்களில் செல்லும் குறைவான எண்ணிக்கையில் வெளியூர் மக்கள் வந்தாலும் அவர்கள் வாகனங்களை சட்டென நிறுத்தி ஆர்வத்துடன் தங்களுக்கு தேவையான மண்பாண்டங்களை வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து மண்பாண்டத் தொழிலாளி கூறுகையில்: பொங்கலை எதிர்பார்த்து மண்பாண்டங்களை விதவிதமாக அடுக்கி வைத்துள்ளோம். பொங்கல் பானை ரூ.100 முதல் 250ரூபாய் வரை உள்ளது. சட்டி 100 முதல் ரூபாய் 150 வரை உள்ளது. அடுப்பு ரூ.200 முதல் ரூபாய் 300 வரை விற்பனைக்கு வைத்துள்ளோம்.சென்ற ஆண்டு விற்பனை செய்த விலையை விட பெரிய அளவில் விலை உயரவில்லை என்றாலும், விற்பனை மந்தமாக உள்ளது.
தொழிலாளர் முத்துக்கருப்