பிரான்ஸ் நாட்டு சொகுசு கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது.
சென்னை துறைமுகத்திற்கு 226 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சொகுசு கப்பல் எம் வி லீ சாம்பிளைன் வியாழக்கிழமை வந்து சென்றது.
இக்கப்பலில் வந்திருந்த சுற்றுலா பயணிகள் செயின் சார்ஜ் கோட்டை, மியூசியம், சாந்தோம் தேவாலயம், கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.