Close
நவம்பர் 22, 2024 5:51 மணி

பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் சமத்துவபொங்கல் விழா…

பெருந்துறை

பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி நடைபெற்ற சமத்துவ பொங்கல்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

பேரூராட்சிக்குள்பட்ட 15 வது வார்டு கண்ணகி வீதி பகுதியில்  வார்டு கவுன்சிலர் கோகுல் குமார் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்  கலந்து கொண்டு பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வம், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி, அரசு வழக்கறிஞர் திருமலை, பேரூர் செயலாளர் திருமூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட பொருளாளர் காடை பாலு.

மாவட்ட கவுன்சிலர் ஏவி பாலகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சரவணன், அன்புக்கரசி, திருவாச்சி ஊராட்சி மன்ற தலைவர் சோளி பிரகாஷ், பிரபாவதி நல்லசிவம், சரண்யா சுரேஷ், பால விக்னேஷ் செல்வராஜ், வைகை சுரேஷ், நாகராஜ் மற்றும் பொதுமக்கள் கழக உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top