Close
நவம்பர் 22, 2024 4:38 மணி

ஈரோட்டில் மகளிர் மட்டுமே கொண்டாடிய காணும் பொங்கல் விழா

ஈரோடு

ஈரோடு

காணும் பொங்கலையொட்டி ஈரோடு வ .உ. சி. பூங்காவில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் மகளிர் மட்டும் பங்கேற்று பல்வேறு விளையாட்டுகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டனர்.

காணும் பொங்கலையொட்டி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலா தளங்களில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஈரோடு வ உ சி பூங்காவில் காணும் பொங்கலை ஒட்டி ஒவ்வொரு வருடமும் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் விழா நடைபெற்று வருகிறது.

காணும் பொங்கலையொட்டி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பெண்கள் ஒரு நாள் முழுவதும் ஒன்று கூடி ஆடி பாடி பொழுதை கழிப்பார்கள். பெண்கள் மட்டுமே வ.உ.சி பூங்காவில் காணும் பொங்கலையொட்டி அனுமதிக்கப்படுவார்கள். ஆண்களுக்கு அனுமதி இல்லை.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக வ. உ .சி . பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டில்   வ உ சி பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஈரோடு
காணும் பொங்கலையொட்டி
ஈரோடு வ .உ. சி. பூங்காவில் குவிந்த பெண்கள்

இதற்காக நேற்று மாநகராட்சி பணியாளர்கள் வ.உ.சி பூங்காவில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை  மதியம் 12 மணி அளவில் வ உ சி பூங்காவில் காணும் பொங்கலை கொண்டாட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பெண்கள் வரத் தொடங்கினர்.

ஏராளமான கல்லூரி மாணவிகள் தங்களது தோழிகளுடனும், பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந் தனர். மயிலாட்டம் , ஒயிலாட்டம் என பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர். மேலும் பாண்டி பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டையும் விளையாடி மகிழ்ந்தனர். மியூசிக்கல் சேர் விளையாட்டிலும்  பங்கேற்று மகிழ்ந்தனர்.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் வ உ சி பூங்காவில் கூடியதால் வ உ சி பூங்கா விழாக்கோலம் பூண்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வ உ சி பூங்கா 2 கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top