சென்னை கிழக்கு மாவட்ட மேற்குப் பகுதி திமுக சார்பில் சென்னை வால்டாக்ஸ் சாலையில் சமத்துவபொங்கல் விழா நடைபெற்றது.
விழாவில் தி.மு.க. துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி..கலந்து கொண்டு சுமார் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி. கே.சேகர்பாபு. சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் , பகுதி செயலாளர்கள் எஸ்.முரளி, கதிரவன், மண்டல குழு தலைவர் ஸ்ரீ ராமுலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.