Close
செப்டம்பர் 20, 2024 3:50 காலை

தொடர் விடுமுறையையொட்டி சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே சித்தன்னவாசலில் குவிந்த பொதுமக்கள்

காணும் பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சித்தன்னவாசலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

புதுக்கோட்டை சுற்றுலா தலம் அன்னவாசல் அருகே சித்தன்னவாசல் சுற்றுலா தலம் உள்ளது. காணும் பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலத்தில் குடும்பத்துடன் , நண்பர்கள், சுற்றுலா பயணிகள்  மற்றும்  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும்-பெண்களும் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்திற்கு வந்திருந்தனர்.

சில சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை சுற்றுலா தலத்திலேயே மதிய உணவுடன் வந்து பொழுதை கழித்தனர். பூங்கா சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் இங்குள்ள குகை ஓவியம், மலை மீது அமர்ந்த சமணர் படுக்கையான ஏழடி பட்டம் போன்றவற்றை கண்டு களித்தனர்.

மேலும் சிறுவர் பூங்கா, போன்றவற்றில் விளையாடியும் செல்போன், கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்தும் விளையாட்டு பொருட்களில் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

 சித்தன்னவாசல் வரும் சுற்றுலா பயணிகள் மலையின் அழகை ரசித்தவாறு படகு குளத்தில் குடும்பத்துடன்  படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதுமட்டுமின்றி அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் புதுக்கோட்டை, விராலிமலை, மணப்பாறை, திருச்சியிலிருந்து வந்த பேருந்துகளில்  கூட்டம் அதிகமாக இருந்தது.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.

சுற்றுலா பயணிகள் கோரிக்கை : இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், சுற்றுலா தலத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எங்களை போன்ற வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை பொழுது இங்கேயே கழிக்கின்றோம். எங்களுக்கு தேவையான உணவுகள் உள்ளே கிடைக்கவில்லை.

மேலும் படகு குளத்தில் போதுமான படகுகள் இல்லை. 6 படகுகள் சேதமடைந்து கிடக்கின்றது. இதனால் படகு சவாரி செய்ய பல மணிநேரம் காத்திருக்கும் நிலையே உள்ளது.  சிறுவர்களுக்கு உண்டான பல விளையாட்டு பொருட்களும் சேதமடைந்து கிடக்கின்றன. அதனை மாற்றி புதிய பொருட்களை பூங்காவில் அமைக்க வேண்டும். பழைய படகுகளை அகற்றி புதிய படகுகளை இயக்க வேண்டும் போன்ற குறைகளை  மாவட்ட நிர்வாகம் நிவர்த்தி செய்ய வேண்டுமென தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top