Close
செப்டம்பர் 20, 2024 6:52 காலை

காமராஜர் துறைமுகம் ரூ. 735 கோடி வருவாய் ஈட்டி சாதனை: துறைமுகத்தலைவர் தகவல்

சென்னை

74-வது குடியரசு தினத்தை ஒட்டி வியாழக்கிழமை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் தேசிய கொடியை ஏற்றிய பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட துறைமுக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால்

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் நடப்பாண்டில் ஒட்டு மொத்தமாக ரூ.735 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது என துறைமுக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால்  தெரிவித்தார்.
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் வியாழக் கிழமை  நடைபெற்ற குடியரசு தின விழாவில் துறைமுக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். மேலும் சுய உதவி குழுக்கள், அரசு பள்ளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை அப்போது அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சுனில் பாலிவால் பேசியதாவது: நாட்டின் 12-வது பெருந்துறைமுகமாக உருவாக்கப்பட்ட எண்ணூர் காமராஜர் துறைமுகம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக ஆண்டுக்கு 12 மில்லியன் டன் நிலக்கரியை கையாண்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு சுமார் 70 மில்லியன் டன் சரக்கு களை கையாளும் திறன் பெற்றுள்ளது.
துறைமுகத்தின் இணைப்பு சாலைகள் உள்ளிட்டவைகளுக் காக ரூ.375 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுகத் தின் வடக்கு பகுதியில் ரூ. 92 கோடியில் தடுப்பு சுவர் அமைக் கப்பட உள்ளது.
 பெட்ரோலியம், எரிவாயு சரக்குகளை கையாளுவதற்காக ரூ
921 கோடியில் புதிய கப்பல் தள கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கார் ஏற்றுமதியில் காமராஜர் துறைமுகம் தொடர்ந்து முன்னிலை வைத்து வருகிறது அண்மையில் 300 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான ரூ. 1.65 கோடியில் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் 33 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள் ளன. இதே கால அளவில் ஒட்டுமொத்தமாக ரூ. 735 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது முந்தைய கால அளவுடன் ஒப்பிடும்போது 23 சதவீதம் அதிகமாகும்.நடப்பாண்டில் ஒட்டுமொத்தமாக 45 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்  பாலிவால்.
நிகழ்ச்சியில் பொது மேலாளர்கள் சஞ்சய் குமார் குணசேக ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top