Close
நவம்பர் 22, 2024 7:05 காலை

திருந்தி நெல் சாகுபடியில் சாதனைக்கு முதல்வரிடம் விருது வென்ற பெண் விவசாயிக்கு ஆட்சியர் பாராட்டு

புதுக்கோட்டை

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்றமைக்காக ரூ.5 லட்சத்திற்கான பரிசு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை ஆட்சியர் கவிதா ராமுவிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற விவசாயி வசந்தா

திருந்தி. நெல் சாகுபடியில் சாதனை படைத்த  புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், ஆலவயல் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி க.வசந்தா என்பவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர்  பரிசு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை வழங்கினார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கவிதாராமுவை நேரில் சந்தித்து முதல்வரிடம் வாங்கிய  சான்று மற்றும் பதக்கத்தை  விவசாயி வசந்தா காண்பித்து வாழ்த்து பெற்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் 26.01.2023 அன்று சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், ஆலவயல் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி.க.வசந்தா என்பவர்,

தமிழ்நாட்டில் 2021-2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்திக்கான, திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்றமைக்காக ரூ.5 லட்சத்திற்கான பரிசு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமுவிடம், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், .க.வசந்தா  30.01.2023  -அன்று காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிகழ்வில், வேளாண் இணை இயக்குநர்பெரியசாமி, துணை ஆட்சியர் (பயிற்சி)  ஜி.வி.ஜெயஸ்ரீ, வேளாண் துணை இயக்குநர்கள் வி.எம்.ரவிச்சந்திரன், எம்.மரியரவி, ஜெயக்குமார், வேளாண் உதவி இயக்குநர் அ.பழனியப்பா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top