ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 31-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இந்த நிலையில், ஈரோடு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளராக ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தென்னரசு வாழ்த்து பெற்றார். அப்போது, ஈரோடு தொகுதி அதிமுக தேர்தல் பணி பொறுப்பாளரான செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்கள் கே.சி. கருப்பண்ணன், கே.வி.ராமலிங்கம்.
தமாகா இளைஞர் அணி தலைவர் யுவராஜா, பொதுச்செயலர் விடியல் சேகர் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகளும் உடன் இருந்தனர். தொடர்ந்து, 30 நிமிடம், தேர்தல் குறித்து, வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்காண வியூகம் குறித்தும், தேர்தல் களப்பணி குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி... ஈரோடு மாநகராட்சி பகுதியில் தொடங்கி மாநகராட்சி பகுதிகுள்ளேயே நிறைவடைகிறது. ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் 37 வார்டுகளை ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளடக்கியுள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதி வரிசையில் 98-வது எண் கொண்ட தொகுதியாகும்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 31 -ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, அமமுக சார்பில் சிவபிரசாத் ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஈரோடு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளராக ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தென்னரசு வாழ்த்து பெற்றார்.
அப்போது, ஈரோடு தொகுதி அதிமுக தேர்தல் பணி பொறுப்பாளரான செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்கள் கருப்பண்ணன் கே.வி.ராமலிங்கம், தமாகா இளைஞர் அணி தலைவர் யுவராஜா, பொதுச்செயலர் விடியல் சேகர் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, 30 நிமிடம், தேர்தல் குறித்து, வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்காண வியூகம் குறித்தும், தேர்தல் களப்பணி குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, அமமுக சார்பில் சிவபிரசாத் ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி... ஈரோடு மாநகராட்சி பகுதியில் தொடங்கி மாநகராட்சி பகுதிகுள்ளேயே நிறைவடைகிறது. ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் 37 வார்டுகளை ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளடக்கியுள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதி வரிசையில் 98-வது எண் தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பின்போது ஈரோடு கிழக்கு தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.
கடந்த 5-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,10,713 ஆண் வாக்காளர்களும், 1,16140 பெண் வாக்காளர்களும், 23 இதர வாக்காளர்களும், 22 ராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 2,26, 898 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் வசதிக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக பெண் வாக்காளர்கள் உள்ளனர். காவிரிக்கரையோர தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கிறது. கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் தொடங்கி ஈரோடு மையப்பகுதி முழுவதும் பெரிய அக்ரஹாரம் வரை ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளடக்கியுள்ளது.
வேட்புமனு தாக்கல் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 7 வரை. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8. வேட்பு மனுவை திரும்பப் பெற இறுதி நாள் பிப்ரவரி 10. வாக்குப்பதிவு பிப்ரவரி 27. வாக்கு எண்ணிக்கை மார்ச்-2. -ஆம் தேதி நடைபெறுகிறது.
தியாக ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பின்போது ஈரோடு கிழக்கு தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.
கடந்த 5-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,10,713 ஆண் வாக்காளர்களும், 1,16140 பெண் வாக்காளர்களும், 23 இதர வாக்காளர்களும், 22 ராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 2,26, 898 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் வசதிக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
வேட்புமனு தாக்கல் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 7 வரை. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8. வேட்பு மனுவை திரும்பப் பெற இறுதி நாள் பிப்ரவரி 10. வாக்குப்பதிவு பிப்ரவரி 27. வாக்கு எண்ணிக்கை மார்ச்-2 -ஆம் தேதி நடைபெறுகிறது.