Close
செப்டம்பர் 20, 2024 6:51 காலை

ரஜினியின் புதிய படம்.. லைக்கா அதிரடி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ள ‘தலைவர் 170’ பட அறிவிப்பை இன்று காலை 10.30 மணிக்கு தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது.

லைகா குழுமத் தலைவர் சுபாஸ்கரனின் பிறந்த நாளான இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ‘தலைவர் 170’ திரைப்படத்தின் அறிவிப்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு பெருமைமிகு தருணம் இது. தலைமுறைகள் கடந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்கின்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ‘தலைவர் 170’ திரைப்படத்தின் பணிகள் இனிதே ஆரம்பம்.

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில், இசைவழி நம் இதயங்களை இணைக்கும் அனிருத் இசையில், பிரம்மாண்டமான திரைப்படங்களைப் படைத்தளிக்கும் சுபாஸ்கரன் தயாரிப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் தலைமைப் பொறுப்பாளர் ஜி.கே.எம். தமிழ் குமரன் தலைமையில், ‘தலைவர் 170’ திரைப்படம் 2024-ம் ஆண்டு திரைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சூப்பர் ஸ்டாரின் ஒவ்வொரு திரைப்பட வெளியீடும், ரசிகர்கள் கொண்டாடும் திருவிழாதான். அவருடன் மீண்டும் இணைவதில் லைகா புரொடக்ஷன்ஸ் பெருமிதம் கொள்கிறது. அனைவரின் வாழ்த்துகளோடு 2024-ல் மாபெரும் கொண்டாட்டத்திற்குத் தயாராவோம். நன்றி!!! என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top