பாஜகவுடன் கூட்டணியை பொருத்தவரை தேர்தல் களத்தில் செய்ய வேண்டிய ஒரு முடிவு என்றார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
கோபிசெட்டிபாளையத்தில் அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: அதிமுகவில் இரண்டு அணிகளும் ஒன்று சேராமல் வெற்றி பெற முடியாது என்ற புகழேந்தி கேள்விக்கு
தமிழ்நாட்டில் வாக்கு இல்லாதவர்களுக்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
புகழேந்தி தமிழ்நாட்டில் வாக்களிக்கின்ற உரிமை இல்லாதவர். அவர் கேள்விக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது. ஈரோடு தேர்தலில் நிற்கும்போது எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததை மாபெரும் வெற்றியாக கருதுகிறோம்.
ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.ஈரோடு கிழக்கு தொகுதியில் எவ்வளவோ இடர்பாடுகளுக்கு இடையில் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
அதிமுக வலிமையுடன் சிறப்போடும் மக்களை நேசிக்கின்ற இயக்கமாக இருக்கும். தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, கூட்டணியை பொருத்தவரை தேர்தல் களத்தில் முடிவு செய்ய வேண்டிய ஒரு முடிவு.அதிமுகவை பொறுத்தவரை கொள்கையில் தெளிவாக இருக்கின்றோம். சிறுபான்மையினரை காக்கின்ற இயக்கமாக அதிமுக இருக்கிறது
ஈ வி கே எஸ். இளங்கோவன் வெற்றியை எதிர்த்து அதிமுக வழக்கு தொடருமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிப்பதை தவிர்த்து விட்டுச் சென்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம் பி சத்தியபாமா, கோபி நகர் மன்ற உறுப்பினர்கள் முத்துராமணன், சுமையா பானு ராஜா, எம்ஜிஆர் மன்றம் அருள் ராமச்சந்திரன், கந்தவேல் முருகன்
உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.