Close
செப்டம்பர் 20, 2024 6:22 காலை

கவிதைப் பக்கம்…. பெண்…. மருத்துவர் மு. பெரியசாமி

கவிதைப் பக்கம்

டாக்டர் மு. பெரியசாமி

பெண்

நீ
நடந்தால்
பூமி சுற்றும்

நீ
பார்த்தால்
சூரியன் உதிக்கும்

நீ
சிரித்தால்
மின்னலுக்கு பிடிக்கும்

நீ
வார்த்தை உதிர்த்தால்
நட்சத்திரம் ரசிக்கும்

நீ
நிலவை விட
அழகு என்று
நிலம் நினைக்கும்

நீ
கை அசைத்தால்
காற்று கை பிடிக்கும்

நீ
மகிழ்ந்தால்
உலகை மழை
நனைக்கும்

இப் பிரபஞ்சம்
உன்னால் மட்டுமே
சிறக்கும்

நீ
பெண்

ஆக்கம் #மரு.மு.பெரியசாமி ##புதுக்கோட்டை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top