கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நம்பியூர் ஒன்றிய பகுதிகளில் ரூ 90 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் முன்னாள் அமைச்சரும் ,சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட நம்பியூர் யூனியனில் தாழ்குனி, கோசணம், அரசு கல்லூரி, மலையபாளையம், பொலவபாளையம், நம்பியூர், எலத்தூர், ஆண்டிபாளையம், கூடக்கரை ஆகிய பகுதிகளில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்காக சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் ஊராட்சி பேரூராட்சி நிதியிலிருந்து ரூ 89 லட்சம் மதிப்பிலான பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் கோபி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்,நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர்தம்பி சுப்பிரமணியம்,எலத்தூர் பேரூர் கழகச் செயலாளர்சேரன் சரவணன், ஊராட்சி மன்ற குழு தலைவர் சுப்பிரமணியம், ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்ட மூர்த்தி,அருண் மஹால் பிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.