Close
செப்டம்பர் 19, 2024 7:18 மணி

கோபி மேற்கு ஒன்றியம் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

கோபிச்செட்டிபாளையம்

பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கிய கோபி எம்எல்ஏ செங்கோட்டையன்

ஈரோடு புற நகா் மேற்கு மாவட்டம் கோபி மேற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின்  75 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அளுக்குளியில் நடைபெற்றது

கூட்டத்துக்கு அளுக்குளி ஊராட்சியில் மேற்கு ஒன்றிய கழக பொருளாளா் பாண்டு ரங்கசாமி தலைமை வகித்தார்.
கூட்டத்துக்கு சட்ட மன்ற உறுப்பினா், மேற்கு மாவட்ட செயலாளா் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்
கூட்டத்தில் முன்னாள் எம்பி சத்தியபாமா யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் குறிஞ்சி நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top