Close
செப்டம்பர் 20, 2024 5:49 காலை

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா

ஈரோடு

ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் நடந்த விளையாட்டு விழாவில் பரிசு வென்ற மாணவிகள்

ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
53-ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது.

வேளாளர் மகளிர் கல்லூரியின் 53-வது விளையாட்டு விழா 11.03.2023 அன்று காலை 8மணியளவில் நடைபெற்றது.  விழாவுக்கு, வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.டி சந்திரசேகர்  விழாவிற்கு தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் எஸ்.கே. ஜெயந்தி  வரவேற்புரையாற்றினார்.

தேசிய தடகள வீரர் என். அண்ணாவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று  கொடியேற்றி விளையாட்டு விழாவைத் தொடக்கி வைத்தார்.

ஈரோடு
ஈரோடு வேளாளர் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழா

கல்லூரியின் விளையாட்டுத்துறை இயக்குனர் கே. மாலதி விளையாட்டுத்துறை ஆண்டறிக்கையை வாசித்தார். சிறப்பு விருந்தினர் விழா சிறப்புரையாற்றி, பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.

மாணவிகள் பலவகையான  விளையாட்டுகளில் பங்கேற்று  சாகசங்களை நிகழ்த்தினர். விழாவின் இறுதியில் விளையாட்டுத்துறை மாணவச் செயலர் வி. பொற்கொடி நன்றி  கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top