இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை மற்றும் புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய இருதயவியல் மற்றும் சிறுநீரகவியல் தொடர்பான கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை 26-03-23 நடைபெற்றது.
புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள இந்திய மருத்துவ சங்க அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கை புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் பெரியசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் மற்றும் மருத்துவமனை யின் செயல் அலுவலர் பிரேம்குமார் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இக்கருத்தரங்கில் இருதய சிறப்பு மருத்துவர் மனோஜ் பேசும்போது, இதுவரை புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனையானது கேத் லேப் எனப்படும் இருதய உள் ஊடுருவி மையம் மற்றும் பைபாஸ் சர்ஜரி செய்யும் முழு கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.