Close
நவம்பர் 22, 2024 1:52 மணி

மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம்

ஈரோடு

பெருந்துறை ஈங்கூர் நால்ரோடு பகுதியில் ஆரம்பித்து ஊர்வலமாக சென்று ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ராகுல் காந்தி அவர்கள் மீது பொய் வழக்கு போட்ட பாஜக அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மத்தியில் ஆட்சி செய்யும்  பாஜக அரசு வருங்கால பாரத பிரதமர் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்தும் மாவட்ட தலைவர் மக்கள் ஜி. ராஜன் தலைமையில் பெருந்துறை ஈங்கூர் நால்ரோடு பகுதியில் ஆரம்பித்து ஊர்வலமாக சென்று ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

 இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் எம் பழனிச்சாமி மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரம ணியம், வட்டாரத் தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், முருகேஷ் ரவி, கதிர்வேல், ஈஸ்வரமூர்த்தி ராவுத் குமார் ஆண்ட முத்துச்சாமி சர்வேஸ்வரன், சென்னிமலை முன்னாள் வட்டாரத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 மாவட்ட துணைத் தலைவர்கள் தில்லை சிவக்குமார், கிருபாகரன், மாவட்ட பொதுச் செயலாளர் ஈங்கூர் சண்முகம், பனியம்பள்ளி நடராஜ் வாசுதேவன், சக்திவேல், அசோகபுரம் பழனிசாமி ,சீதாபதி, பழனிவேல், மணி, சாதிக், வேலுச்சாமி, கதிரேசன், நாச்சிமுத்து, புல்லட் மணி, முத்து, கணேஷ், கோவிந்தராஜ், கிருஷ்ணன்,

இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இலக்கியச் செல்வன், பெருந்துறை, பேரூர் மாமன்ற உறுப்பினர்  பசரியா பேகம், குப்புராஜ் ,பழனிவேல், பாபு, தங்கவேல், பெரியசாமி, வேலவன், பொன்னுச்சாமி, சுந்தரம், மாணிக்கம், கவுன்சிலர்கள் கொடுமுடி சிபி தம்பி என்கின்ற முனிராஜ், மணிகண்டன்.

பாஸ்கரன், அருண் ரவி, வைத்தீஸ்வரன், ஹலாதத் ஜான், தங்கவேல், செந்தில்குமார், இளைஞர் காங்கிரஸ் கவின் குமார், தேவராஜன், வாய்ப்பாடி பொன்னுச்சாமி ,கே .பி .சின்னப்பன், கௌதமன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சென்னிமலை வடக்கு வட்டார தலைவர் ஒ. சி. சண்முகம் வரவேற்றார்.  முடிவில் பெருந்துறை பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top