Close
செப்டம்பர் 20, 2024 4:16 காலை

கவிஞர் தங்கம்மூர்த்திக்கு தமிழன் தொலைக்காட்சி விருது

புதுக்கோட்டை

தமிழன் தொலைக்காட்சி சார்பில் கல்விச்செம்மல் விருது பெறுகிறார், கவிஞர் தங்கம்மூர்த்தி

புதுக்கோட்டை திருமயம் செந்தூரன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழன் தொலைக்காட்சி மற்றும் ஏடிஎஸ் தொண்டு நிறுவனம் இணைந்து விருதுகள் வழங்கும் விழாவை நடத்தினர்

இவ்விழாவில்,   புதுக்கோட்டையின் இலக்கிய அடையாளம், தேசிய நல்லாசிரியர், தமிழக அரசின் ராதாகிருஷ்ணன் விருதாளர், சிறந்த கல்வியாளர் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்க டேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர், தமிழ்ச் செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி  அவர்களுக்கு  கல்விச் செம்மல் விருது வழங்கி கௌரவிக் கப்பட்டது.

கல்விச்செம்மல் விருது பெற்ற கவிஞர் தங்கம்மூர்த்திக்கு  புதுக்கோட்டையின் பல்வேறு இலக்கிய அமைப்புகளை சேர்ந்தவர்களும் கல்வியாளர்களும் எழுத்தாளர்களும் சால்வை அணிவித்து  வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top